மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
தியாகதுருகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
தியாகதுருகம்,
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பழனியாபிள்ளை, வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் வரவேற்றார். இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பிரபாகரன், கணேஷ்ராஜா, மணிகண்டன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதியதாக தேசிய அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டும் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.