மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
x

ஆண்டிமடத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஆண்டிமடத்தில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) அம்பிகாபதி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், முட நீக்கியல் நிபுணர்கள், கண் மருத்துவர், மனநல மருத்துவர் ஆகியோர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசோதனை செய்தனர். இதில் 153 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான புதிய அடையாள அட்டை 18 மாணவர்களுக்கும், ஆதார் கார்டு 5 பேருக்கும், மருத்துவ காப்பீடு 45 பேருக்கும், பஸ் பாஸ் 7 பேருக்கும், கண் கண்ணாடி 5 பேருக்கும் வழங்கப்பட்டது. இந்த பரிசோதனைகளில் ஒரு மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.


Next Story