மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
x

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. முகாமினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் ஜெய்சங்கர், ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் தாவூத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்கள், அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்களுக்காக பரிந்துரை செய்தனர். முகாமில் 90 மாற்றுததிறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 42 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை புதிதாக வழங்கப்பட்டது. 12 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டது. 45 மாற்றுத்திறனாளிகளுக்கு யு.டி.ஐ.டி. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு பதிவு செய்யப்பட்டது. இதைதவிர சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, செவித்துணைக்கருவி என 3 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உதவி உபகரணங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக 10 மாற்றுத்திறனாளி குழந்தைகள் பரிந்துரை செய்யப்பட்டனர். முன்னதாக வேப்பூா் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. இதே போல் வருகிற 19-ந்தேதி பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 20-ந்தேதி ஆண்டிகுரும்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், 21-ந்தேதி சின்னவெண்மணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.


Next Story