மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

சுல்தான்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
கோவைமாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 18 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடத்தியது. முகாமை கலெக்டர் கிராந்தி குமார், சூலூர் வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் எலும்பு மூட்டு டாக்டர் இப்ராஹிம், கண் டாக்டர் கார்த்திகேயன், குழந்தைகள் நல டாக்டர் மகாலட்சுமி, மனநல டாக்டர்சரவண பிரகாஷ், பொது மருத்துவர் நிர்மலாதேவி உள்ளிட்ட அரசு மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேசிய அட்டைக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கினர். முகாமில் 150 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்டக் கல்வி அலுவலர் வள்ளியம்மை, உதவித் திட்ட அலுவலர் இளமுருகன், வட்டாரக் கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், சுல்தான்பேட்டை வட்டார் உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.