மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 16 Oct 2023 12:15 AM IST (Updated: 16 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ முகாம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வியின் கீழ் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி 31-ந் தேதி வரை 10 ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் முட நீக்கியல் டாக்டர், காது, மூக்கு, தொண்டை டாக்டர், மன நல டாக்டர், கண் டாக்டர், மருத்துவ உளவியல் நிபுணர், செவித்திறன் ஆய்வாளர் மற்றும் கண் பரிசோதனை ஆய்வாளர் ஆகியோர் சார்ந்த மருத்துவக்குழு மாற்றுத்திறனாளி குழந்தைகளை மதிப்பீடு செய்து, தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை, இலவச பஸ் மற்றும் ரெயில் பயணச்சலுகை, தேவையான உதவி உபகரணங்கள் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் அறுவை சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில்...

அதன்படி இன்று புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நாளை (செவ்வாய் கிழமை) வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 18-ந்தேதி குடவாசல் அகரஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 19-ந்தேதி கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 20-ந்தேதி நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 25-ந்தேதி மன்னார்குடி மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, 26-ந்தேதி நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 27-ந்தேதி கோட்டூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, 30-ந்தேதி திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மற்றும் 31-ந் தேதி முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மருத்துவ முகாம் நடக்கிறது.

இம்முகாமில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள், இல்லம் சார்ந்த குழந்தைகள் மற்றும் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்திற்கு வரும் குழந்தைகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story