தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்


தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
x

சீர்காழியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழியில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை தாங்கினார். திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் வரவேற்று பேசினார். நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து தருகிறார். தற்பொழுது தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் தூய்மை பணியாளர்கள் பங்கேற்று பயன் அடைய வேண்டும் என கூறினாா். தொடர்ந்து நகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் டாக்டர்கள் பிரபாகரன், ராகவி கொண்ட மருத்துவக்குழுவினர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு அளவு, காசநோய், மன அழுத்தம், ஆகியவற்றுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story