கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மருத்துவ முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மருத்துவ முகாம் தி.மு.க. மாவட்ட மருத்துவர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மயிலாடுதுறையில் தி.மு.க. மாவட்ட மருத்துவ அணி புதிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டாக்டர் முத்து தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் கல்யாணம், நகரசபை தலைவர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் ரத்ததான முகாம், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மருத்துவ அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் டாக்டர் பாலாஜி நன்றி கூறினார்.