மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை


மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
x
சேலம்

கொண்டலாம்பட்டி:-

சேலம் அம்மாபேட்டை பகுதி சந்தியா நகரை சேர்ந்தவர் குமரன். அவரது மகன் பரத் (வயது 22). இவர் சேலம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். பரத் தனது நண்பர்கள் தங்கியிருந்த அறையில் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரத் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி போலீசார், பரத் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பரத் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story