மருத்துவ ஆலோசனை கூட்டம்
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மருத்துவ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை, வட்டார சுகாதார பேரவை சார்பில் மருத்துவ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் டாக்டர் கலைமணி தலைமை தங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவர்மன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆலத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து சுகாதார பணிகளின் தேவைகள் குறித்து பேசப்பட்டது. இக்கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை, ஊராக வளர்ச்சி துறை, பள்ளிக்கல்வித்துறை, விவசாயத்துறை, ஒருங்கிணைந்த ஊட்டசத்துத்துறை, சமூகநலத்துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story