கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை


கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 12 Jun 2023 12:15 AM IST (Updated: 12 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

நீலகிரி

கூடலூர்

புகையிலை பயன்பாடு ஒழிப்பை முன்னிட்டு கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு பரிசோதனை நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமை நகராட்சி ஆணையர் பிரான்சிஸ் சேவியர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நீலகிரி பல் மருத்துவர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாமில் மருத்துவர் கவிதா, கீர்த்தி, ஜெய்திம்மன், ஐஸ்வர்யா சுகுமாரன் ஆகியோர் பங்கேற்று தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், புற்றுநோய் உள்ளிட்ட பெரு நோய்கள் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள், பெரு நோயால் பாதிக்கப்படுபவர்களால் அவர்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள் துன்பங்கள் குறிக்கும் மருத்துவர் கவிதா தூய்மை பணியாளர்களிடையே விளக்கம் அளித்து பேசினார்.


Next Story