கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை


கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 1 Oct 2023 3:30 AM IST (Updated: 1 Oct 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதிகளின் உடல்நலன் கருதி நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல்

மாவட்ட சிறையில்திண்டுக்கல் மலைக்கோட்டை அருகே மாவட்ட சிறை இருக்கிறது. இங்கு பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 250-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உள்ளனர். இந்த கைதிகளின் உடல்நலன் கருதி நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு சிறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.

இதில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பொன்னர், ரமேஷ் மற்றும் மருத்துவ பணியாளர்களை கொண்ட குழுவினர் கைதிகளை பரிசோதனை செய்தனர். அனைத்து கைதிகளுக்கும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் கைதிகளுக்கு மருத்துவ ஆலோசனை, மருந்துகள் வழங்கப்பட்டன.

1 More update

Next Story