பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் மருத்துவ ஆராய்ச்சி மாணவர் சிகிச்சை பலனின்றி பலி


பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் மருத்துவ ஆராய்ச்சி மாணவர் சிகிச்சை பலனின்றி பலி
x

பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் பஸ்-மோட்டார் சைக்கிள் மோதலில் மருத்துவ ஆராய்ச்சி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செங்கல்பட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் பெருங்காஞ்சி கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 25). இவர் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று கொண்டிருந்தபோது அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹரிபிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபிரசாத் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பல்கலைக்கழக பஸ் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story