சாலைகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்... தொற்றுநோய் பரவும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை


சாலைகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்... தொற்றுநோய் பரவும் அபாயம் - மக்களுக்கு எச்சரிக்கை
x

நெல்லை மாநகர பகுதிகளில் பல இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் வருவதும், அதனை அப்புறப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

நெல்லை,

நெல்லை அருகே மருத்துவக் கழிவுகள் சாலைகளில் கொட்டிச் செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெல்லை மாநகர பகுதிகளில் பல இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் வருவதும், அதனை அப்புறப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இந்த நிலையில் பாளையங்கோட்டைக்கு அருகே உள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் நான்கு வழி சாலைக்கு அருகே மருத்துவக் கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டுள்ளன.

காலாவதியான மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் சாலைகளில் கொட்டப்பட்டுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுகள் எங்கே இருந்து இங்கே வந்து கொட்டப்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து இங்கு கொட்டப்பட்டுள்ளதா அல்லது கேரளா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதா என நெல்லை சுகாதாரத்துறை அதிகாரிகளும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story