கள்ளக்குறிச்சியில் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கிரிஜா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் செந்தில், பொருளாளர் வீராசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவ தன்னார்வலர்களை அங்கீகரித்து பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், ஊக்கத்தொகை என்பதை மாற்றி ஊதியமாக வழங்க வேண்டும், மாதந்தோறும் 5-ந் தேதி ஊதியம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊக்கத்தொகை ரூ.2 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும், மக்களைத்தேடி மருத்துவ தன்னார்வலர்களை சுகாதாரத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் மகாலிங்கம், பிரேமா, கொளஞ்சியம்மாள், அருணா, பேபி, பிச்சம்மாள், தேவகி உட்பட கலர் கலந்து கொண்டனர்.


Next Story