மீஞ்சூர், பொன்னேரி கோட்ட மின்வாரியத்தில் ரூ.37¾ கோடியில் மின்திட்ட பணிகள் - அதிகாரி தகவல்


மீஞ்சூர், பொன்னேரி கோட்ட மின்வாரியத்தில் ரூ.37¾ கோடியில் மின்திட்ட பணிகள் - அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 30 July 2022 8:34 AM GMT (Updated: 30 July 2022 8:51 AM GMT)

மீஞ்சூர், பொன்னேரி கோட்ட மின்வாரியத்தில் ரூ.37¾ கோடியில் மின்திட்ட பணிகள் நடைபெற்று வருவதாக மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

மீஞ்சூரில் இந்திய சுதந்திர அமுத பெருவிழாவையொட்டி ஒளிமிகு பாரதம் முழுமையான எதிர்காலம் மின்சக்தி 2047 என்ற மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு மின்சார வாரிய தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானகழக சென்னை வடக்கு மேற்பார்வை என்ஜினீயர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். வல்லூர் தேசிய அனல்மின் நிலைய தலைமை நிர்வாக என்ஜினீயர் கேதர்ரஞ்சனபாண்டு முன்னிலை வகித்தார். கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. டிஜே.கோவிந்தராஜன் அனைவரையும் வரவேற்றார்.

மேற்பார்வை என்ஜினீயர் சந்திரசேகர் பேசுகையில்:-

பொன்னேரி கோட்டம், மீஞ்சூர் உபகோட்டம் ஆரணி பேரூராட்சியில் துணை மின் நிலையம், பொன்னேரி கும்மிடிப்பூண்டி மின் நிலையங்களில் மின்மாற்றிகள் தரம் உயர்த்துதல், மின் மீட்டர் மாற்றியது, இலவச விவசாய மின் இணைப்புகள், உதய் திட்டம் என்பது உள்ளிட்ட மொத்தம் ரூ.37 கோடியே 78 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான மின்திட்ட பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் அத்திப்பட்டு ஊராட்சிமன்ற துணைத்தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல், அத்திப்பட்டு ஊராட்சியில் 3 இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும், பழுதான மின்கம்பங்களை மாற்றவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்பார்வை என்ஜினீயர் தெரிவித்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமாமகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய குழுத்தலைவர் ரவி, பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம்விஸ்வநாதன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story