தொப்பூருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை:தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது


தொப்பூருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை:தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 23 July 2023 1:00 AM IST (Updated: 23 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தொப்பூருக்கு நாளை (திங்கட்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

ஆலோசனைக் கூட்டம்

தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் மாவட்ட செயலாளர் இன்பசேகரன், முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், மாநில நிர்வாகிகள் தர்மசெல்வன், சத்தியமூர்த்தி, கீரை விஸ்வநாதன், ராஜேந்திரன், சூடப்பட்டி சுப்பிரமணி, செந்தில்குமார், டாக்டர் தருண், மாவட்ட அவைத்தலைவர்கள் மனோகரன், செல்வராஜ், நகர செயலாளர் நாட்டான் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் அண்ணா பிறந்த நாளாம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கு ஆணை பிறப்பித்த தமிழக முதல்-அமைச்சருக்கு தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பான வரவேற்பு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைக்க தொப்பூருக்கு நாளை (திங்கட்கிழமை) வருகை தரும் தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள திரளாக கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர்கள் தங்கமணி, முருகன், மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் ஆ.மணி, ரேணுகாதேவி, உமாசங்கர், ராஜாகுமாரி, கிருஷ்ணகுமார், ஆறுமுகம், தி.மு.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், ஆர்.சிவகுரு, ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், வைகுந்தன், மல்லமுத்து, கருணாநிதி, சபரிநாதன் முருகேசன், செல்வராஜ், வேடம்மாள், சக்திவேல், மாது, சேட்டு, கோபால், கிருஷ்ணன், செங்கண்ணன், சௌந்தரராஜன். அன்பழகன், சந்திரமோகன், சரவணன், முத்துக்குமார், சிவப்பிரகாசம், நெப்போலியன், உள்ளிட்ட பேரூராட்சி செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள், அணிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story