கிருஷ்ணகிரியில்பட்டாசு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்


கிருஷ்ணகிரியில்பட்டாசு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு கடை பாதுகாப்பு குறித்து உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கடைகளை நடத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட கடைகளில் உள்ள குறைகள் குறித்து நோட்டீஸ் வழங்கப்படும். அதனை பட்டாசு கடைக்காரர்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும். தொடர்ந்து பட்டாசு கடைக்கான உரிமம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

இதில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, உதவி கலெக்டர்கள் சரண்யா, பாபு மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story