திம்ஜேப்பள்ளி ஊராட்சியில்கிராமசபை கூட்டம்


திம்ஜேப்பள்ளி ஊராட்சியில்கிராமசபை கூட்டம்
x
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கெலமங்கலம் ஒன்றியம் திம்ஜேப்பள்ளி ஊராட்சி பெரிய உள்ளுகுறுக்கையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி முத்தன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவுகளை வாசித்து அங்கிகரிக்கப்ட்டது, ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொது சுகாதாரம் பேணப்பட வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ..48 லட்சத்தில் நடைபெறும் திட்டப்பணிகள், தேசி ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர் சுரேகா கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் விவேகணந்தா செய்திருந்தார். முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர்் ஈஸ்வரி முத்தன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

1 More update

Next Story