நாமக்கல்லில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்


நாமக்கல்லில்   உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்
x

நாமக்கல்லில் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம்

நாமக்கல்

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட உடற்கல்வி அலுவலர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் வட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் விளையாட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட அளவிலான போட்டியை மங்களபுரம் அரசு பள்ளியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக ஆசிரியர்கள் கூறினர். இதில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story