இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி


இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
x

ஓசூரில் பா.ஜ.க. சார்பில் இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி சார்பில் இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, ஓசூரில் நடைபெற்றது. ஓசூர் ரிங் ரோடு பகுதியில் உள்ள மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி தலைவர் முரளி வரவேற்றார். இதில், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், வருகிற 2024-ம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல் 2026-ல் தமிழ்நாட்டில் அண்ணாமலை முதல்வர் ஆவதையும் யாராலும் தடுக்க முடியாது. வருகிற 2024 தேர்தலில் இந்த பகுதியிலிருந்து பா.ஜ.க. சார்பில் எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் செல்லவேண்டும். அதற்கு உணர்வுப்பூர்வமாக கட்சியினர் துடிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.

இதில், மாநில துணைத்தலைவர் புவனேஸ்வர், மாநில செயற்குழு உறுப்பினர் கிஷோர், மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் பி.எல்.மனோகர், துணைத்தலைவர் முருகன், செயலாளர் பிரவீன்குமார், பொருளாளர் சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, தேன்கனிக்கோட்டை வேப்பனப்பள்ளி ஆகிய இடங்களில் இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் ரமேஷ் சிவா கலந்து கொண்டார்.


Next Story