அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்


அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்
x

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.

சிவகங்கை
அனைத்து துறை அரசு ஓய்வூதியர் சங்கத்தின் சிவகங்கை வட்ட கிளை 4-வது மாநாடு சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. வட்டக்கிளை துணை தலைவர் ராசேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லமுத்து மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். இதையொட்டி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி வட்டக்கிளை தலைவராக அழகேசன், செயலாளராக கிருஷ்ணகுமார், பொருளாளராக சிவகுமார், துணை தலைவர்களாக ராசேந்திரன், முகமது அயூப்கான், விஸ்வநாதன், இணை செயலாளர்களாக சரோஜினி, லோகநாதன், தெட்சிணாமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினராக சிவராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாவட்ட தலைவர் பி. வடிவேலு பேசினார். இதில், முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி நல சங்கத்தின் மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் லோகநாதன் நன்றி கூறினார்.Next Story