இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் திருப்புவனம் பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் உள்ளதால் மாடுகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்புவனத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தீயணைப்பு அலுவலகம் அமைக்க வேண்டும். திருப்புவனம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி கூடுதல் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும். திருப்பாச்சேத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவு புதிதாக தொடங்க வேண்டும். திருப்புவனத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மோசமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றிய செயலாளர் மோகன், உறுப்பினர்கள் வீரபத்திரன், செந்தில் சுப்பையா, தவுடன், ஜெயபிரகாஷ், வீராச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story