விடுதி, ஓட்டல் உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு


விடுதி, ஓட்டல் உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:30 AM IST (Updated: 4 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

விடுதி, ஓட்டல் உரிமையாளர்களுடன் போலீசார் கலந்தாய்வு நடத்தினர்.

மயிலாடுதுறை

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சீர்காழி போலீஸ் நிலையத்தில் விடுதி மற்றும் ஓட்டல் உரிமையாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். . டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடுப்பு தினம் அனுசரிக்கப்பட உள்ளதாலும், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக விடுதி உரிமையாளர்கள் தங்கள் விடுதிகளுக்கு வரும் நபர்களின் முழு விவரங்களை சேகரிக்க வேண்டும். சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்த தகவலை உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் யாரையும் விடுதியில் தங்க அனுமதிக்க கூடாது, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அனைத்தையும் பதிவு செய்து அந்த காட்சிகளை குறைந்தது 20 நாட்களுக்காவது பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.


Next Story