தென்னை விவசாயிகள் சங்க கூட்டம்
தமிழ்நாடு தென்னை விவசாயிகளின் சிவகங்கை மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
திருப்புவனம்,
தமிழ்நாடு தென்னை விவசாயிகளின் சிவகங்கை மாவட்ட குழு கூட்டம் திருப்புவனம் அடுத்த லாடனேந்தலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தினேஸ்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ஜெயராமன், மாநில துணை தலைவர் முத்துராமு உள்பட பலர் பேசினார்கள். இதில், மாநில குழு உறுப்பினர் மதுரைவீரன், மாவட்ட பொருளாளர் கேசவன், மாவட்ட துணை தலைவர் மதியரசு மற்றும் தர்மமணி, முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்னை மரங்களை தாக்கும் கரும்புள்ளி நோய்க்கு மருந்து வழங்க வேண்டும், தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story