333 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


333 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:44+05:30)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 ஊராட்சிகளில் இன்று (வியாழக்கிழமை) கிராம சபை கூட்டம் நடக்கிறது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 ஊராட்சிகளில் இன்று (வியாழக்கிழமை) கிராம சபை கூட்டம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிராம சபை கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது. இதையடுத்து அனைத்து தரப்பு மக்களையும் ஈடுபடுத்தி மிகவும் ஏழை, மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் என மக்களால் அடையாளம் காணப்பட்டு மக்கள் நிலை ஆய்வு பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

ஏற்கனவே, மக்கள் நிலை ஆய்வில் அடையாளம் காணப்பட்ட இலக்கு மக்கள் குடும்பங்களில் இருந்து சுய உதவிக்குழுக்கள், குடியிருப்பு அளவிலான மன்றம், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகியவற்றின் மூலம் அடையாளம் காணப்பட்டு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகளால் சரிபார்க்கப்படுகிறது. இதை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலை மக்கள் நிலை ஆய்வுப் பட்டியல் கிராம சபை கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

முழு பங்களிப்பு

எனவே, அந்தந்த கிராம ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மேலும் மக்கள் நிலை ஆய்வு கூட்டத்தில் ஒப்புதலுக்கு உங்களின் முழு பங்களிப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story