கோபி அருகே கூகலூர் தண்ணீர்பந்தல் புதூரில் காகித ஆலையை இயக்குவது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்; அதிகாரிகளை எம்.எல்.ஏ. கண்டித்ததால் பரபரப்பு


கோபி அருகே கூகலூர் தண்ணீர்பந்தல் புதூரில் காகித ஆலையை இயக்குவது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்; அதிகாரிகளை எம்.எல்.ஏ. கண்டித்ததால் பரபரப்பு
x

கோபி அருகே கூகலூர் தண்ணீர்பந்தல் புதூரில் காகித ஆலையை இயக்குவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அப்போது அதிகாரிகளை எம்.எல்.ஏ. கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே கூகலூர் தண்ணீர்பந்தல் புதூரில் காகித ஆலையை இயக்குவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அப்போது அதிகாரிகளை எம்.எல்.ஏ. கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காகித ஆலை

கோபியை அடுத்துள்ள கூகலூர் தண்ணீர்பந்தல்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காகித ஆலை 20 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ஆலைக்கு பின்னால் தேக்கி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் விவசாய நிலங்ககளில் திறந்து விடுவதால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், விளைநிலங்கள் மாசு அடைந்துள்ளதாக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காகித ஆலைக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆலை நிர்வாகம் நீதிமன்றம் மூலம் மீண்டும் ஆலையை இயக்க அனுமதி பெற்றது.

கருத்து கேட்பு கூட்டம்

இந்த நிலையில் காகித ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படுவதாக தண்ணீர்பந்தல்புதூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதை கண்டித்து கடந்த 1-ந் தேதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காகித ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று திருச்செங்கோடு தொகுதி ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. மற்றும் அந்தியூர் தொகுதி ஏ.ஜி வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அதிகாரிகளை கண்டித்த எம்.எல்.ஏ.

அப்போது ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் கூறும்போது, 'ஒரு ஆலைக்காக ஊரையே அழிக்கலாமா, சொல்லுங்கள் பொதுமக்களுக்கு விஷம் வாங்கி கொடுத்து விடலாம்' என ஆவேசமாக பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு கண்டித்தார். இதற்கு அதிகாரிகள் பதில் அளிக்க முடியாமல் அமைதியாக நின்றனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் நிருபர்களிடம் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறும்போது, 'இந்த காகித ஆலை மூலம் அடுத்த தலைமுறையும் பல்வேறு நோய்களுக்கு உட்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நானும், அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ.வும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரை விரைவில் சென்னையில் சந்திக்க இருக்கின்றோம். காகித ஆலை பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு எடுக்கப்படும் என்று ஊர் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறோம்.' என்றார்.


Next Story