விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 24 May 2023 11:45 AM IST (Updated: 24 May 2023 11:46 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த கூட்டத்தை கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் குறைகள், கருத்துக்களை எடுத்து கூறி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story