பாளையம்புதூரில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி அருகே பாளையம்புதூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில், தமிழக அரசின் 2-ம்ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஆறுமுகம், சரஸ்வதி துரைசாமி, தேவராசன், வெங்கடேசன், மோகன், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மல்லமுத்து வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார். இதில் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் முத்துலட்சுமி, இண்டூர் கூட்டுறவு வங்கி தலைவர் பெரியண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, தடங்கம் இளையசங்கர், கவுதம், சவுளூர் தங்கம், ராமச்சந்திரன், செல்வகுமார், லோகேஷ், முத்துசாமி, ஈஸ்வர், பிரபு, கிருஷ்ணமூர்த்தி, மலர்விழி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர், முடிவில் மாரி நன்றி கூறினார்.