கீழ்பவானி பாசனப்பகுதியில் நுண்ணீர் பாசன திட்டம் குறித்துகருத்து கேட்பு கூட்டம்


கீழ்பவானி பாசனப்பகுதியில் நுண்ணீர் பாசன திட்டம் குறித்துகருத்து கேட்பு கூட்டம்
x

கீழ்பவானி பாசனப்பகுதியில் நுண்ணீர் பாசன திட்டம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்

ஈரோடு

பவானிசாகர்

கீழ்பவானி வாய்க்கால் பாசன திட்டத்தில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன பெறும் வகையில் நுண்ணீர் பாசனம் திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பரீட்சார்த்த முறையில் சோதனை அடிப்படையில் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள 2 ஆயிரத்து 372 ஏக்கர் நிலங்களுக்கு முதற்கட்டமாக நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று பவானிசாகரில் உள்ள தோட்டக்கலை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கப்படம் ப்ரொஜெக்டர் மூலம் விவசாயிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. மேலும் இத்திட்டம் குறித்து விவசாயிகளிடையே எடுத்து கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலான விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.


Next Story