கூட்டுறவு சங்கங்கள் சார்பில் பொதுமக்களுக்கான மெகா கடன் மேளா


கூட்டுறவு சங்கங்கள் சார்பில் பொதுமக்களுக்கான மெகா கடன் மேளா
x

கூட்டுறவு சங்கங்கள் சார்பில் பொதுமக்களுக்கான மெகா கடன் மேளா 26-ந் தேதி நடக்கிறது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மழைவாழ்மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், மற்றும் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள் மூலம் விவசாய பயிர்க்கடன், நகை கடன், கறவை பசுக்கள் வாங்க மத்திய கால கடன், கறவை பசுக்கள் பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், நாட்டுப்புறக் கலைஞர்கள், பாரம்பரிய கலைபொருட்கள் தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு சிறப்பு கடன் உதவிமற்றும் மகளிர் சுய உதவிக் குழு கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்படி சங்கங்கள் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட அளவில் மெகா சிறப்பு கடன் மேளா வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) திருப்பத்தூர் அடுத்த சாலை நகரில் உள்ள மாணிக்கம் மஹால் திருமண மண்டபத்தில் காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.

கடன்பெற விரும்புவோர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story