கலைஞர் நூற்றாண்டையொட்டி இன்று 100 இடங்களில் 'மெகா மருத்துவ முகாம்'


கலைஞர் நூற்றாண்டையொட்டி இன்று 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம்
x

கோப்புப்படம் 

கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் "மெகா மருத்துவ முகாம்" நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் "மெகா மருத்துவ முகாம்" நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இந்த மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதன்படி, இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை பரிசோதனை, பொது அறுவைசிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு பிரிவிகளில் இருக்கக்கூடிய மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்படும்.

சென்னையை பொறுத்தவரை 10 இடங்களிலும், தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களில் 90 இடங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story