தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்


தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்
x

தமிழகம் முழுவதும் 34-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.

சென்னை,

கொரோனா நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் முன் எச்சரிக்கை தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 34-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ -மாணவிகள் எந்தவித அச்சமும் இன்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவின் 4-ம் அலையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

1 More update

Next Story