மேகதாது அணை கட்டக் கூடாது; நீட் தேர்வு தேவையில்லை -தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது- கவர்னர் உரை


மேகதாது அணை கட்டக் கூடாது; நீட் தேர்வு தேவையில்லை -தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது- கவர்னர் உரை
x
தினத்தந்தி 9 Jan 2023 5:31 AM GMT (Updated: 9 Jan 2023 5:52 AM GMT)

"நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது" என சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தினார்.

சென்னை

சட்டப்பேரவையில் கடும் அமளிக்கு மத்தியில் தமிழில் உரையை தொடங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கினார்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தமிழில் வாழ்த்து கூறினார் கவர்னர் ஆர்.என்.ரவி. தொடர்ந்து பேசிய அவர்

தமிழக சகோதர - சகோதரிகளுக்கு வணக்கம்

கவர்னரை பேச விடாமல் தி.மு.க கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து பேசிய கவர்னர் உரையின் முக்கிய அமசங்கள் வருமாறு:-

பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

மினி டைடல் பார்க் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு வருகிறது

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டது.பருவமழையையும், புயலையும் சிறப்பாக கையாண்ட தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 1.35 கோடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

குறுகிய காலத்தில், செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியது தமிழக அரசு.

2030ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு வேலைவாய்ப்பு அதிகரிப்பு. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது.

149 சமத்துபுரங்களை புதுப்பிக்கும் பணிநடைபெற்று வருகிறது

தமிழ்நாடு அரசு தற்போது தொடங்கியுள்ள காலை உணவு திட்டம் நாட்டுக்கே முன்மாதிரி திட்டமாக விளங்கி வருகிறது.

"வாழிய தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த்" என தனது உரையை நிறைவு செய்தார் கவர்னர் ரவி. சுமார் சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றினார்.

கவர்னர் ரவி ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை, சபாநாயகர் அப்பாவு தமிழில் கூறி வருகிறார்


Next Story