வேளாங்கண்ணி பேராலயத்தில் மேகாலயா மாநில முதல்-மந்திரி கான்ராட் கே சங்மா தரிசனம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
வேளாங்கண்ணி,
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்திற்கு மேகாலய மாநில முதல்-மந்திரி கான்ராட் கே சங்மா இன்று புனித ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்தார். நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகைதந்து ,அங்கிருந்து சாலை மார்கமாக இன்று காலை வேளாங்கண்ணி வருகை புரிந்தார்.
பின்னர் தனது மனைவி மெஹ்தாப் மற்றும் குடும்பத்தினருடன் மேகாலயா மாநில முதல்வர் கான்ராட் கே சங்மா மாதாவை தரிசனம் செய்தார். பேராலயம் வந்த மேகாலயா முதல்வருக்கு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் பங்குத்தந்தை அற்புதராஜ்உதவி பங்கு தநாதை டேவிட்தன்ராஜ் மற்றும் பேராலய நிர்வாகம் சார்பாக சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு பேராலயம் சார்பில் மாலை சுற்றப்பட்ட மெழுகுவர்த்தி பிரசாதமாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தரிசனத்தை முடித்த மேகாலயா முதல்வர் சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் சென்று பின்னர் அங்கிருந்து,விமானம் மூலம் பெங்களூர் செல்ல இருக்கிறார்.
மேகாலயா மாநில முதல்-மந்திரி வருகையை அடுத்து நாகை மாவட்ட காவல்துறை சார்பாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.