மேத்தபிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா


மேத்தபிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா
x

தெற்கு விஜயநாராயணம் மேத்தபிள்ளையப்பா தர்கா கந்தூரி விழா நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை மாவட்டத்தில் மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக திகழும் தெற்கு விஜயநாராயணம் மேத்தபிள்ளையப்பா தர்கா கந்தூரிவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த தர்காவின் கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் பிறையை கணக்கிடாமல் ஆடி மாதம் 16-ந் தேதி நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த தர்கா அமைந்துள்ள தெற்கு விஜயநாராயணத்தில் ஒரு முஸ்லிம் குடும்பமும் கிடையாது. கந்தூரி விழாவில் கலந்துகொள்ள வரும் முஸ்லிம்கள் குடும்பத்தினருக்கு இந்த ஊரில் வசிக்கும் தேவர் சமுதாயத்தினர் தங்கள் வீடுகளை அவர்களுக்கு தங்குவதற்கு வழங்கி அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுக்கிறார்கள்.மேலும் விழாவை முன்னின்றும் நடத்துகிறார்கள்.

நேற்று நடந்த கந்தூரி விழாவில் மேத்த பிள்ளையப்பா வாழ்ந்ததாகக் கூறப்படும் வீட்டிலிருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டது. இதில் திரளான முஸ்லிம்கள் "நாரே தகுபீர், அல்லாகு அக்பர்"என கோஷமிட்டவாறு ஊர்வலமாக வந்து பின்னர் தர்காவில் கொடியேற்றினார்கள். அதனை தொடர்ந்து சிறப்பு துவா ஓதப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா மற்றும் பிற பகுதிகளில் இருந்தும் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.


Next Story