மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் மாசி பெருவிழா தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்!
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில் மாசி பெருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து மறுநாள் மயானக் கொள்ளை திருவிழாவும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான மாசி பெருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story