ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு


ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு
x

வந்தவாசியில் ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் இன்று நடந்தது. ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயமணி ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.வி.மூர்த்தி, இரா.குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியவுடன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆர்.விஜயன், உறுப்பினர்கள் சக்திவேல், சுகந்தி தணிகைவேல், தனசேகர், தேவி துரைராஜ் ஆகியோர் நிர்வாகத்தை கண்டித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், வந்தவாசி ஒன்றியத்தில் ஒப்பந்தப்புள்ளி சரிவர நடைபெறுவதில்லை. ஆதிதிராவிடர் பகுதி வளர்ச்சி பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை கூட நடத்தாமலும், காரணம் கூறாமலும் ஒத்தி வைக்கின்றனர்.

மேலும் எங்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பல்வேறு துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதே இல்லை. கூட்டமும் உரிய நேரத்தில் தொடங்கப்படுவதும் இல்லை.

எனவே ஒன்றிய நிர்வாகத்தின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றனர்.

---


Next Story