காரிமங்கலம் மத்திய ஒன்றியத்தில்தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கைமேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தலைமையில் நடந்தது


காரிமங்கலம் மத்திய ஒன்றியத்தில்தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கைமேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 30 May 2023 10:00 AM IST (Updated: 30 May 2023 10:06 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

காரிமங்கலம் மத்திய ஒன்றியத்துக்குட்பட்ட நாகனம்பட்டி, மொட்லூர், முக்குளம், பொம்மஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமை தாங்கினார். மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களில் கையெழுத்திட்டனர். பின்னர் ஏற்கனவே பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி, மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், அன்பழகன், மாவட்ட விவசாய பிரிவு துணை அமைப்பாளர் மாரியப்பன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் சக்தி, இளைஞர் அணி ஹரிபிரசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story