சேலத்தில் இரவில் பயங்கரம்500 ரூபாய்க்காக வியாபாரி கழுத்தை நெரித்து கொலைதொழிலாளி வெறிச்செயல்


சேலத்தில் இரவில் பயங்கரம்500 ரூபாய்க்காக வியாபாரி கழுத்தை நெரித்து கொலைதொழிலாளி வெறிச்செயல்
x

சேலத்தில் இரவில் அட்வான்ஸ் பணம் 500 ரூபாய்க்காக வியாபாரியை கொலை செய்த தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்

சேலம்

சேலத்தில் இரவில் அட்வான்ஸ் பணம் 500 ரூபாய்க்காக வியாபாரியை கொலை செய்த தொழிலாளி கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரும்பு வியாபாரி

சேலம் அன்னதானப்பட்டி பாஞ்சாலிநகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் அன்பழகன் (வயது 48). இவர், சீலநாயக்கன்பட்டியில் இருந்து எருமாபாளையம் செல்லும் சாலையில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது கடையில் அமானி கொண்டலாம்பட்டி நாட்டாமங்கலத்தை சேர்ந்த முனியப்பன் (33) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகிறார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் அவர் முதலாளியிடம் அடிக்கடி ரூ.500, ரூ.1,000 என அட்வான்ஸ் வாங்கி செலவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதனிடையே, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முனியப்பன் தனது முதலாளி அன்பழகனிடம் ரூ.500 அட்வான்ஸ் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் ஏற்கனவே வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. எப்போது பார்த்தாலும் பணம் வாங்கி கொண்டே இருக்கிறாயே? என்று சத்தம் போட்டுள்ளார். மேலும், பணம் தரமுடியாது எனக்கூறி முனியப்பனை வேலையில் இருந்து அன்பழகன் நிறுத்திவிட்டார். இதனால் வேலை மற்றும் வருமானம் இல்லாமல் முனியப்பன் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தார்.

கழுத்தை நெரித்து கொலை

நேற்று இரவு 9 மணி அளவில் இரும்பு கடைக்கு முனியப்பன் வந்தார். பின்னர் அவர் தன்னை மீண்டும் வேலையில் சேர்க்குமாறு கூறி அன்பழகனிடம் தகராறில் ஈடுபட்டார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் ஆத்திரம் அடைந்த முனியப்பன், அந்த பகுதியில் கிடந்த கம்பியை எடுத்து அன்பழகனின் கழுத்தை இறுக்கியும், கையால் நெரித்தும் கொலை செய்தார். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து தப்பி ஓட முயன்ற முனியப்பனை பிடித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தொழிலாளியிடம் விசாரணை

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட அன்பழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அட்வான்ஸ் தர மறுத்த தகராறில் இரும்பு வியாபாரியை அவரிடம் வேலை செய்த தொழிலாளியே கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story