வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்


வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 20 Aug 2023 2:45 AM IST (Updated: 20 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரம்பாடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சேரம்பாடி வணிகர் சங்கத்தின் பொதுகுழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் தாமஸ் தலைமை தாங்கினார். சேரம்பாடி செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்று பேசினார். தொடந்து மூத்த வணிகர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தலைவராக ரவி, துணை தலைவராக அக்பர்அலி, செயலாளராக தமிழ்செல்வன், துணை செயலாளராக ஜார்ஜ், பொருளாளராக கபூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் சேரம்பாடி, எருமாடு பகுதிகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story