வணிகர் சங்க பேரமைப்பு கூட்டம்


வணிகர் சங்க பேரமைப்பு கூட்டம்
x

ஆற்காட்டில் வணிகர் சங்க பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் பொதுக்குழு மற்றும் ஆலோசனை கூட்டம் ஆற்காட்டில் உள்ள மாவட்ட வணிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் ஆற்காடு நகர தலைவர் ஏ.வி.டி.பாலா தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் பரத்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் பொன். கு.சரவணன் கலந்துகொண்டு வருகிற 27-ந் தேதி அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் ஈரோட்டில் நடைபெறும் உரிமை முழக்க மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து பேசினார்.

கூட்டத்தில் மே மாதம் 5-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் வணிகர் சங்க மாநாட்டிற்கு ஆற்காட்டில் உள்ள 30 சங்கங்கள் சார்பாக வேன் மற்றும் பஸ்களில் பெருந்திரளாக சென்று கலந்து கொள்வது. ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற அரசிடம் கோரிக்கை வைப்பது. நகராட்சியில் குப்பை வரியை குறைக்க மனு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story