வாக்காளர் அட்டையுடன், ஆதார் இணைக்கும் பணி ஆகஸ்டு மாதம் தொடக்கம்


வாக்காளர் அட்டையுடன், ஆதார் இணைக்கும் பணி   ஆகஸ்டு மாதம் தொடக்கம்
x

வாக்காளர் அட்டையுடன், ஆதார் இணைக்கும் பணி ஆகஸ்டு மாதம் தொடங்குகிறது என்று இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கூறினார்.

மதுரை


வாக்காளர் அட்டையுடன், ஆதார் இணைக்கும் பணி ஆகஸ்டு மாதம் தொடங்குகிறது என்று இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் காலொன் உள்பட தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை அதிகாரிகள் கவனமாக செய்ய வேண்டும். பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்பவர்களின் பெயர்கள் உரிய முறையில் பரீசிலனை செய்து சேர்க்க வேண்டும். இதுவரை ஜனவரி1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வந்தது. இனி மேல் ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய தேதிகளை கொண்டு புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க முடியும்.

வரவேற்பு

வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப் பட்டு உள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வாக்காளர் அட்டையுடன், ஆதாரை இணைக்கும் பணி தொடங்குகிறது. இதன் மூலம் ஒருவர் பல இடங்களில் வாக்காளர் அட்டை பெறுவது தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலர்கள், வாக்காளர் பெயர் சேர்க்கும் விண்ணப்பத்தில் வாக்காளர்கள் கட்டாயம் செல்போன் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த வேண்டும். அதே போல் பூத் சிலிப் வழங்கும் பணியில் உள்ள சிரமங்களை களைய வேண்டும் என்றனர். முன்னதாக இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டேவுக்கு கலெக்டர் அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story