மெட்ரோ ரெயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி இயக்கம் -மெட்ரோ ரெயில்வே அறிவிப்பு


மெட்ரோ ரெயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி இயக்கம் -மெட்ரோ ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2023 5:51 AM IST (Updated: 4 Dec 2023 6:52 AM IST)
t-max-icont-min-icon

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழ்நாடு அரசு சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுவிடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, மெட்ரோ ரெயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி இயக்கப்படும்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

'மிக்ஜம்' புயல் காரணமாக தமிழ்நாடு அரசு சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுவிடுமுறை அறிவித்ததை தொடர்ந்து, மெட்ரோ ரெயில்கள் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி இயக்கப்படும். அதாவது, அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இதேபோல, பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் பகுதியில் மழைநீர் அதிகமாக தேங்கி உள்ளதால் வாகன நிறுத்துமிடம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகனங்களை நிறுத்தியுள்ளவர்கள் தங்கள் வாகனங்களை எடுத்து செல்லுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. வாகனங்களை எடுத்து செல்லாத பட்சத்தில் வாகனத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story