திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. தேசிய பொதுக்குழு கூட்டம்


திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. தேசிய பொதுக்குழு கூட்டம்
x

திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடந்தது.

திருப்பூர்

திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி. தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடந்தது.

தேசிய பொதுக்குழு கூட்டம்

ஏ.ஐ.டி.யு.சி. தேசிய பொதுக்குழு கூட்டம் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் ரமேந்தரகுமார் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி. திருப்பூர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.நடராஜன் வரவேற்றனர்.

அரசியல் மற்றும் செயல்பாட்டு அறிக்கையை பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர் பேசினார். மத்திய பா.ஜனதா அரசால் ஊழல், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளது. சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்கள், ஆதிவாசிகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளன. பா.ஜனதாவை தோற்கடிக்க, முதலாளித்துவ தாக்குதலை முறியடிக்க விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒற்றுமையை கட்டமைக்க வேண்டும் என்று விவாதித்தனர்.

இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்

இந்திய உழைக்கும் மக்கள், தொழிற்சங்கங்கள், ஏ.ஐ.டி.யு.சி. ஆகியவை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தும் அரசியல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவாதித்தனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க தேவையான களப்பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் ஜம்முகாஷ்மீர், திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களை தவிர நாடு முழுவதும் இருந்து 30 பெண்கள் உள்பட 265 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தேசிய பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.


Related Tags :
Next Story