23 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டம்


23 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டம்
x

குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் 745 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருப்பூர்

குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களில் 745 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிராம சபை கூட்டம்

குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. குடிமங்கலம் ஒன்றியத்தில் நடந்த 23 ஊராட்சிகளுக்கு நடந்த கிராம சபை கூட்டங்களுக்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை தாங்கினர். வடுகபாளையம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு வடுகபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

கிராமசபை கூட்டத்தில் ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன், உதவி இயக்குனர் (ஊரக வளர்ச்சி) மதுமிதா, குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் சிவகுருநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் கனகராஜன் நன்றி கூறினார்.

அனிக்கடவு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் சென்னியப்பன் நன்றி கூறினார். கிராம சபை கூட்டங்களில் ஊராட்சியில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சுத்தமான குடிநீர்

ஊராட்சிகளில் சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்யவேண்டும், மேல்நிலை நீர்தேக்க தொட்டி தரை மட்ட நீர்த்தேக்க தொட்டிகளை மாதம் இருமுறை சுத்தம் செய்ய வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் பணிகளை தேர்வு செய்தல், அனைத்து கிராம தூய்மை பாரத இயக்கம் சார்பில் தனி நபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்பட 745 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிராமசபை கூட்டங்களில் 23 ஊராட்சிகளில் ஆண்கள் 1,797 பேரும், பெண்கள் 2,473 பேரும் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story