மின் கட்டணம் செலுத்துவது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி


மின் கட்டணம் செலுத்துவது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி
x

அங்கன்வாடி மைய கட்டடங்களுக்கு யார் மின் கட்டணம் செலுத்துவது என்பது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.

திருப்பூர்

அங்கன்வாடி மைய கட்டடங்களுக்கு யார் மின் கட்டணம் செலுத்துவது என்பது குறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.

ஒன்றிய குழு கூட்டம்

பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரான கூட்டம் ஒன்றிய தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பானு பிரியா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்டு ஒன்றிய குழு உறுப்பினர் ரவி (ம.தி.மு.க.) பேசியதாவது:-

அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணம் ஊழியர்களை செலுத்துவதாக கூறப்படுகிறது. மின் கட்டணத்தை ஊராட்சியின் மன்ற நிர்வாகம் செலுத்துமா? அல்லது ஒன்றிய நிர்வாகம் செலுத்துமா? என தெரிவிக்க வேண்டும். அருள்புரம் முதல் உப்பிலிபாளையம் வரையிலான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் : அங்கன்வாடி மையங்களுக்கு முதலில் மின் கட்டணம் 100 யூனிட்டுக்குள் வந்ததால் இதுவரை கட்டணம் செலுத்தவில்லை. தற்போது மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது. இதை பணியாளர்கள் செலுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஒன்றிய நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய ஆணையாளர் ரமேஷ் : மின் கட்டணம் குறித்து கலெக்டரிடம் அறிவுரை பெற்று அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தீர்மானம்

கரைப்புதூர் ராஜேந்திரன் (மாவட்ட கவுன்சிலர்): அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் உணவில் அரிசி பெரிய அளவில் உள்ளதாக கூறுகின்றனர். சன்னரக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றிய ஆணையாளர்: அங்கன்வாடி மையங்களுக்கு செறிவுட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. சற்று பெரிதாகத்தான் இருக்கிறது.

பாலசுப்பிரமணியம்( ஒன்றியக்குழு துணைத் தலைவர்): பல்லடம் ஒன்றியத்தில் கல்வி வளர்ச்சிக்காக கட்டிடப் பணிகளுக்கு மாவட்டத்திலேயே அதிக அளவில் பல்லடம் ஒன்றியத்திற்கு ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். பின்னர் 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் செயல்படுத்திட, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு செயல்படுத்த இயலாத காரணங்களால், சில திட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது என்பது உள்ளிட்ட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Related Tags :
Next Story