குப்பையை தரம் பிரிக்கும் மையத்தால் ஈக்கள் தொல்லை


குப்பையை தரம் பிரிக்கும் மையத்தால் ஈக்கள் தொல்லை
x

நல்லாத்துப்பாளையத்தில் குப்பையை தரம் பிரிக்கும் மையத்தால் ஈக்கள் தொல்லை அதிகரித்து விட்டதாக மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.

திருப்பூர்

நல்லாத்துப்பாளையத்தில் குப்பையை தரம் பிரிக்கும் மையத்தால் ஈக்கள் தொல்லை அதிகரித்து விட்டதாக மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.

ஈக்கள் தொல்லை

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டல கூட்டம் நேற்று மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். உதவி ஆணையாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

20-வது வார்டு கவுன்சிலர் குமார்:-

கோடை காலத்தில் மக்களுக்கு சப்பை தண்ணீர் அதிகம் தேவைப்படும். அந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பாதாள சாக்கடை குழாய் பதிப்புக்கு தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும்.

6-வது வார்டு கவுன்சிலர் கோபால்சாமி:-

எம்.எஸ்.நகர் முதல் போயம்பாளையம் வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். இங்குள்ள குட்டையில் உடனடியாக ஷட்டர் அமைக்க வேண்டும். மழைக்காலத்தில் குட்டை நிரம்பினால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் நிலை ஏற்படும். நல்லாத்துப்பாளையத்தில் குப்பையை தரம் பிரிக்கும் மையத்தால் ஈக்கள் தொல்லை உள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும். காலியிடங்களை அளவீடு செய்து வரி போட வேண்டும். சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய ஆட்களை நியமிக்க வேண்டும். குடிநீர் பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை விரைந்து வழங்க வேண்டும்.

சப்பை தண்ணீர்

17-வது வார்டு கவுன்சிலர் செழியன்:-

கேபிள் பதிப்பு பணிக்காக புதிய சாலைகளை அனுமதி பெறாமல் தோண்டி சேதப்படுத்துகிறார்கள். இதை கட்டுப்படுத்த வேண்டும். குடிநீர் குழாய் பல்வேறு இடங்களில் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதை சீரமைக்க வேண்டும்.

2-வது வார்டு கவுன்சிலர் மாலதி:-

பயன்பாட்டில் இல்லாத சமுதாய கூடத்தில் பராமரிப்பு பணி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சவுண்டம்மன் கோவில் அருகில் ஆழ்குழாய் கிணறு மோட்டார் பழுதாகி தண்ணீர் வரவில்லை. சப்பை தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.

மண்டல தலைவர் கோவிந்தராஜ்:-

வாரம் ஒருமுறை அதிகாரிகள் மற்றும் பணி ஒப்பந்தாரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, பணிகளை ஒருங்கிணைத்து முறையாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வார்டு மக்களின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. குடிநீர் பணிகளை மேயர் விரைந்து செயல்படுத்திக்கொடுப்பார் என்று கூறினார்.


Related Tags :
Next Story