மேட்டூர் அணை தண்ணீரை வரவேற்க தயாராகும் கல்லணை


மேட்டூர் அணை தண்ணீரை வரவேற்க தயாராகும்  கல்லணை
x

மேட்டூர் அணை தண்ணீரை வரவேற்க தயாராகும் கல்லணை

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

நாளை திறக்கப்படும் மேட்டூர் அணை தண்ணீரை வரவேற்க கல்லணை தயாராகி வருகிறது.

மேட்டூர் அணை திறப்பு

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். வரலாற்றில் முதல்முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படும் தண்ணீரை வரவேற்க கல்லணை தயாராகி வருகிறது. இந்த தண்ணீர் கல்லணைக்கு வருகிற 27-ந்தேதி வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பொலிவுடன் பாலங்கள்

கல்லணைக்கு தண்ணீர் வந்தவுடன் கல்லணையில் இருந்து காவிரி பாசனப் பகுதிகளுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படும். இந்தநிலையில் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் கல்லணைக்கால்வாய், காவிரி ஆறுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உடனடியாக முடித்து ஆற்றின் குறுக்கே போடப்பட்ட மண் சாலைகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்க ப்பட்டுள்ளது. கல்லணை அருகே அடப்பன்பள்ளம் கீழ் பாலப்பணிகள் நேற்று வரை பாதி அளவு தான் முடிந்து உள்ளது. மேலும் கல்லணைக்கால்வாய் கரையில் சிறுமதகு பாலம் கட்டி கரையை வலுப்படுத்த வேண்டும். இந்த பணிகள் இன்னும் 5 நாட்களில் முடிக்க வேண்டும். இந்த பணி முடித்துவிட்டால் கல்லணையில் இருந்து ஒரே சமயத்தில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்க ஏதுவாக இருக்கும்.

மேட்டூர் அணை திறப்பை முன்னிட்டு கல்லணையில் உள்ள பாலங்களில் வர்ணம் பூசப்பட்டு பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. காவிரி, வெண்ணாற்றில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால், மதகுகள், பாலங்கள் ஆகியவை வர்ணம் பூசப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்கமணி கூறுகையில், முன் கூட்டியே மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது வரவேற்கத்தக்கது என்றார்.


Related Tags :
Next Story