மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

சேலம்

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சில நாட்களாக வினாடிக்கு 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் கன அடிவீதம் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரத்து 435 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நேற்று வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி நீர்மட்டம் 118.59 அடியாக இருந்தது.


Next Story