எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x

எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சி

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளையொட்டி அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாலை அணிவித்து மரியாதை

அ.தி.மு.க.வின் நிறுவனரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சி கோர்ட்டு அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அன்னதானம்

இதேபோல் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் காஜாமலையில் அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல் தலைமையில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முசிறி நகர அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முசிறி கைகாட்டியில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், மாவட்ட அவைத்தலைவர் தங்கவேல், நகர செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், வழக்கறிஞர் பாரதிராஜா, இளைஞர் அணி ஆனந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆமூர் சுரேஷ் ராஜா மற்றும் பலர் மாலை அணிவித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி

இதேபோன்று ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் முசிறியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரத்தினவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் நந்தினி சரவணன், ஒன்றிய செயலாளர் பேங்க் ராமசாமி மற்றும் லலிதா ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகர்

அ.தி.மு.க. திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story